அமோக வரவேற்புடன் அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினர்

Report Print Yathu in சமூகம்

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள கிளிநொச்சி மாவட்ட செயலக குழுவினருக்கு இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 10 மணியளவில் அழைத்து வரப்பட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநாச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.