மதுபானம் மற்றும் சிகரட்டுக்காக தினமும் 97 கோடியை செலவிடும் இலங்கையர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையர்கள் தினமும் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்காக 97 கோடி ரூபாயை செலவிடுவதாக மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

50 கோடி ரூபாய் மதுபானத்திற்காகவும் 9 கோடி ரூபாய் மென் மதுபானமான பியருக்காகவும் 38 கோடி ரூபாய் புகைப்பிடிப்பதற்காகவும் இலங்கையர்கள் செலவிட்டு வருகின்றனர்.

மதுவரி திணைக்களம் மற்றும் இலங்கை புகையிலை நிறுவனம் ஆகியவற்றின் தரவுகளுக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கை பெண்களில் 01 வீதமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளதுடன் 0.5 வீதமான பெண்கள் மதுபானம் அருந்துகின்றனர்.

இலங்கை ஆண்களில் 34.8 வீதமானவர்கள் மதுபானம் அருந்துவதுடன் 29.4 வீதமானவர்கள் புகைப்பிடிக்கின்றனர் எனவும் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.