பங்களாதேஷ் டாக்காவில் பாரிய தீ விபத்து!! இலங்கையர் உட்பட பலரின் நிலை..

Report Print Steephen Steephen in சமூகம்

பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு இலங்கையர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீயை கட்டுப்படுத்த 17 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீயில் இருந்து தப்பிக்க அதில் சிக்கியுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து கீழே குதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள 19 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.