மாலைதீவு செல்ல கஞ்சிபான இம்ரானுக்கு விமான பயணச் சீட்டை தயார் செய்தவர்கள் குறித்து விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் மற்றும் அமில சம்பத் ஆகியோர் மாலைதீவுக்கு தப்பிச் செல்லும் வகையில் விமான பயணச்சீட்டை தயார் செய்து கொடுத்தவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இவர்கள் இருவரும் மாலைதீவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

நான்கு சந்தேக நபர்கள் துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

எனினும் இவர்கள் இருவரும் மாலைதீவுக்கு செல்ல விமான பயணச்சீட்டுக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தாகவும் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.