மூன்று மாதத்தில் 1114 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 1114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் அருள் குமரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் டெங்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிராந்திய பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் அதிகளவிலான மக்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் டெங்கு நோய் வராமல் தடுக்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவூட்டும் விதத்தில் அனைவரும் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் ஹசித திசேர, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் பீ. கயல்விழி, உள்ளூராட்சி திணைக்களங்களின் உயரதிகாரிகள், முப்படையினரின் உயரதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.