திருகோணமலை பகுதியில் வயோதிபரொருவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுவுத்துவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற வயோதிபரொருவர் முதலை கடி தாக்குதலுக்கு உள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு காயமடைந்தவர் தம்பலகாமம் - உல்பத்தாவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆர்.எம்.விஜேரத்ன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீன்பிடிப்பதற்காக ஓடையொன்றிற்கு சென்றிருந்த வேளை திடீரென முதலையொன்று வந்து நீண்ட தூரம் இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.