காதலனை சந்திக்க தமிழ்நாடு சென்ற இலங்கை தமிழ் பெண் தற்கொலை

Report Print Murali Murali in சமூகம்

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க தமிழ் நாடு சென்று இருந்த இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்திகளில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மலர்மேரி (வயது 22) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அதன் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மலர்மேரி தனது காதலனை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த காதல் ஜோடி சென்னையின் பல இடங்களை சுற்றிப்பார்த்துள்ளதுடன், தன் காதலி மலர்மேரியை கடந்த 25ம் திகதி இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் முடிவு செய்தார்.

ஆனால் காதலன் அவினாஷ் உடன் பல இடங்களை சுற்றிய சந்தோஷத்தில் இருந்த மலர்மேரி அவரை விட்டு பிரிந்து செல்ல மறுத்துவிட்டாராம். இதையடுத்து காதலியை விடுதி ஒன்றில் தங்க வைத்துவிட்டு அவினாஷ் சென்றுள்ளார்.

இந்நிலையில் மலர்மேரி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்து திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மலர்மேரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.