இலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி! இரு கைகளும் இன்றி அபார சாதனை

Report Print Vethu Vethu in சமூகம்

உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார்.

எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Latest Offers