வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி

Report Print Thileepan Thileepan in சமூகம்
183Shares

வவுனியா, விபுலானந்தாக் கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், முகுந்தரதன் கேசிகன், ஜெகதீஸ்வரன் தனுகாசன், சிறிசங்கர் கணேசன் சாரங்கன், பிரியந்தன் சகீதரன் ஆகிய நான்கு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் 8 ஏ,பீ சித்திகளை தியாகராஜா தனுஜன், சுதா அருள்வாசன் ஆகிய இரு மாணவர்களும் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்கக் கூடிய வகையில் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.