விடுதலை புலிகள் தொடர்பில் ஆதங்கம்! கூட்டமைப்பின் மீது கொந்தளிப்பு...

Report Print Sujitha Sri in சமூகம்

ஐ.நாவின் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கருத்து தெரிவிக்கும் போது விடுதலைப் புலிகள் தொடர்பில் ஆதங்கம் வெளியிட்டுள்ளதுடன், கூட்டமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களின் கருத்தை வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கூறுகையில்,

போராட்டம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் ஐ.நாவிலிருந்து எந்தவித முடிவும் எமக்கு கிடைக்கவில்லை. தமிழ் மக்களான நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சிங்கள அரசோ சரி அல்லது கூட்டமைப்போ சரி எந்த தீர்வையும் பெற்றுதரவில்லை.

எல்லா அரசியல்வாதிகளும் விலைபோய்விட்டனர். இதேவேளை விடுதலைப்புலிகளின் போராட்டமும் பல வருடங்களாக நீடித்தது. அதன் மூலமும் எமக்கு எந்தவிதமான விமோசனமும் கிடைக்கவில்லை. அழிவைத் தான் மக்கள் சந்தித்தார்களேயொழிய எமக்கான எந்த விடிவும் கிடைக்கவில்லை.

அதேபோன்று தான் தற்போது கூட்டமைப்பை நம்பிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களுக்காக எந்த அரசியல்வாதியும் இல்லை. ஐநாவும் எமக்கு ஏமாற்றமான முடிவை தான் தந்துகொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers