அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்

Report Print Nivetha in சமூகம்

அலுகோசு பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்முகப்பரீட்சைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றில் இருந்து 79 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த 79 விண்ணப்பங்களில் இருவரே அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.