வரலாற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

Report Print Sumi in சமூகம்
99Shares

யாழ்.அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்த 7 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் இன்று காலை பாடசாலை அதிபர் சிறிரதி முருகசோதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது நினைவுச் சின்னங்களும், சிறுதொகைப் பணம் உட்பட நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பாடசாலையில் 8 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 7 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந் நிகழ்வில் இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட முன்னாள் ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், கல்விச் சமூகத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.