பாடசாலை சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Report Print Tamilini in சமூகம்

பாடசாலை சிறுவன் தமது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குறித்த சிறுவன் நாலபிட்டி கல்லோயா பகுதியை சேர்ந்த 13 வயதான துமேஸ் மதுஷன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாய் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுவனுக்கு தந்தை இல்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த சிறுவன் தமது பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்த வந்துள்ளார் இந்நிலையில் நேற்றுபாடசாலையின் ஊடாக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து இருந்தபோதும் அந்த சுற்றுலா பயணத்திற்கு குறித்த சிறுவன் செல்லவில்லை எனவும் குறித்த சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்த போதே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் குறித்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிறுவன் நேற்றைய தினம் பாடசாலை செல்லாது தனது பாட்டியின் சேலையில் வீட்டின் அறையில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணைக்காக நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரனைகள் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Latest Offers