யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு எதிராக சத்தியபிரமாணம்

Report Print Sumi in சமூகம்

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு உள்ளமைக்கு அமைய யாழில் உள்ள அரச கூட்டுதாபனங்களில் இன்று விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு, அரச ஊழியர்கள் உட்பட பலர் போதைப்பொருளுக்கு எதிராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தல் பற்றிய சட்ட வரைவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers