இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மதுஷின் சகா விடுவிப்பு! நபரொருவர் மீது தாக்குதல்

Report Print Sujitha Sri in சமூகம்

துபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட அவரின் சகாக்கள் இருவர் நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் என்ற நபரே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் உள்ள லங்கா சஜித் பெரேராவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் விடுவிக்கப்பட்ட போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவமானது விடுவிக்கப்பட்டுள்ள நபரின் உதவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest Offers