வவுனியாவில் 6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கேரள கஞ்சாவினை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா, வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டபோது 6 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers