கிளிநொச்சியில் வீதியில் வைத்து பெண் குழந்தைக்கு நடந்துள்ள கொடூரம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் மூன்றரை வயது பெண் குழந்தையொன்று உறவினரால் வீதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.

தாய் தந்தையின்றி உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வந்த குழந்தையே நேற்று மாலை இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த குழந்தை அயலவர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள உள்ள கடைக்கு சென்றுள்ளது. இதன்போதே குழந்தை அவருடைய மாமாவினால் வீதியில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனவே கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண் குழந்தையை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers