தமிழர் தலைநகரில் புதையல் மூலம் பெறப்பட்ட புத்தர் சிலை..!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

புல்மோட்டை பகுதியில் புத்தர் சிலையொன்றை வெட்டி தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை, ஜின்னா பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய முஹம்மது தாஹா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்காக துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதையலின் மூலம் குறித்த புத்தர் சிலை பெறப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் இன்றையதினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers