மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்திரை மாத உறுதிமொழி நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் சித்திரை மாத உறுதிமொழி நிகழ்வு நாடெங்கிலும் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி சபைகள், பாடசாலைகளில் சித்திரை மாத உறுதிமொழி பிரகடனம் செய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் உறுதிமொழி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தேசியக்கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சித்திரை மாத உறுதிமொழி பிரகடனம் வாசிக்கப்பட்டு உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மடக்களப்பு மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேல், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாநகரசபை மண்டபத்தில் போதை ஒழிப்பின் அவசியம் தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த சித்திரை மாத உறுதிமொழி பிரகடனம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சித்திரை உறுதி உரை நிகழ்வு இன்று காலை மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Latest Offers