கிழக்கு மாகாணத்தில் சித்திரை புது வருட உறுதிமொழி நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புது வருட உறுதிமொழி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை வளாகத்தில் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அன்சார், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் பத்மராஜா மற்றும் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் வை.எம்.சலீம் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, கிண்ணியாவில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன் போது சக உத்தியோகத்தர்கள் இணைந்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் சித்திரைப் புதுவருட உறுதியுரை நடைபெற்றுள்ளது.