கம்பளை நாவலப்பிட்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டி - கங்கேகல, நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தெம்பிலிகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5000 மேற்பட்டோர் பயன்படுத்தும் இவ்வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும், கண்டி மாட்ட அரசியல்வாதிகள் இந்த வீதியை கண்டுகொள்வதில்லை எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கம்பளை - நாலப்பிட்டி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக தொலஷ்பாகை, உலபனை, மாவெலி பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers