கினிகத்தேன நகரில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மத்திய மாகாணம், கினிகத்தேன நகரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகான உரிமையாளர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் வாகனங்களுக்கான காபன்பத்த வரி அறவீட்டினை இரத்து செய்ய வேண்டுமென கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஏற்கனவே புகைப் பரிசோனை உட்பட பல வரி அறவீடுகளும் அறவிடுகின்ற நிலையில் காபந்துபத்த வரியினை வரவு செலவு திட்டத்திலிருந்து நீக்குமாறு வாகான உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பேரணியாக நகரில் வாகனங்களை கருப்பு கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest Offers