அம்பாறை மாவட்டத்தில் சித்திரைப் புத்தாண்டு உறுதியுரை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையில் உருவான போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கான சித்திரைப் புத்தாண்டு உறுதியுரை எடுக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை பிரதி அதிபர் கே.இளங்கோ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

Latest Offers