பௌத்த விகாரைகளில் இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் சிறுகதை எழுதிய நபர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

பௌத்த விகாரைகளில் இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் சிறுகதை எழுதிய எழுத்தாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான சாக்திக சாத்குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹாவல நீதிமன்றினால் குறித்த எழுத்தாளரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொல்கஹாவெல பிரதேசத்தினைச் சேர்ந்த பௌத்த பிக்குகளினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹாவெல பிரதேச செயலகத்திலும் குறித்த எழுத்தாளர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பௌத்த விஹாரைகளில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விடயங்கள் சிறுகதையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers