கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கண்டி பாரம்பரிய உடை அணிந்து ஆவணப்படம் எடுக்க முற்பட்ட வெளிநாட்டவர்களால் நேற்றைய தினம் கண்டியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கண்டிய உடை அணிந்து ஆவணப்படும் எடுக்க முயற்சித்த குறித்த வெிளநாட்டவர்களுக்கு எதிராக ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

குறித்த ஆவணப்படத்திற்காக இரு வெளிநாட்டவர்கள் கண்டி பாரம்பரிய ஆடைகளை அணிந்து மோசமான வகையில் செயற்பட்டதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், இதன்போது பொலிஸார் தலையிட்டு வெளிநாட்டவர்களை கண்டி குளத்திற்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றினுள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஆவணப்படத்திற்காக பதிவு செய்யப்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers