வவுனியாவில் போதைப்பொருளுக்கு எதிரான சத்தியபிரமாண நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் இன்று வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய மைதானத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமாண நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியபிரமாணத்தை பொலிஸார் செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ்அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers