மரண தண்டனையால் போதைவஸ்தை ஒழிக்கமுடியாது! மைத்திரிக்கு சர்வதேசம் நினைவூட்டல்

Report Print Ajith Ajith in சமூகம்

மரண தண்டனையை விதிப்பதன் மூலம் போதைவஸ்து தொடர்பான குற்றங்களை தடுக்க முடியாது என்று சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,

போதைவஸ்து தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் கூறிவருகின்ற நிலையிலேயே மன்னிப்புசபையின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது.

மரண தண்டனை என்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். இந்த தண்டனையை பொறுத்தவரையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் அது பல நாடுகளில் தோல்வியையே தந்துள்ளது.

அத்துடன் நியாயமற்ற விசாரணைகளின்போது குற்றமற்றவர்களின் உயிர்களும் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சமூக பொருளாதார தளம் இல்லாத சிறுபான்மை சமூகத்தினரும் சமூகத்தில் குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் ஆட்களே பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் மரண தண்டனையால் போதைவஸ்து பிரச்சினையை தீர்த்ததாக எங்கும் சாட்சியம் இல்லை என்றும் மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள நீதிமுறையில் யார் தண்டிக்கப்படவேண்டும், யார் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான நியாயம் இல்லை.

எனவே பழிதீர்ப்பதை விடுத்து, உயிருக்கு மதிப்பளிக்கும் கலாசாரத்தை தொடரவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் கோரியுள்ளார்.

Latest Offers