மட்டக்களப்பில் சித்திரை மாத உறுதிமொழியெடுத்த அரச பணியாளர்கள்

Report Print Navoj in சமூகம்

போதையிலிருந்து விடுபட்ட நாடு எனும் தொனிப்பொருளில் நடைபெறும் சித்திரை மாத உறுதி உரை எனும் நிகழ்வானது இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் கோட்நட் பெனாண்டோ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் தேசிய கொடியினை ஏற்றி வைத்த பின்னர் மாவட்ட செயலக உத்தியோகத்தர் மற்றும் பணியாளர்கள் போதையிலிருந்து விடுபடுதல் தொடர்பான சித்திரை உறுதி உரையை எடுத்துக்கொண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் கருத்து வெளியிடுகையில்,

போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை வலுப்பெற செய்வதற்கு அரச பணியாளர்களாகிய நாம் இன்றைய நாளில் உறுதி பூண வேண்டும்.

சமூக சீரழிவுகளை கொண்டு வரும் போதையொழிப்பு அமுல்படுத்தும் பிரிவிற்று முழு ஒத்துழைப்பை நல்கி நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் கலந்து பங்கேற்றுள்ளனர்.

Latest Offers