மூன்று ஆண் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்! பரீட்சை எழுதப்போகும் தருணத்தில் வந்த பேரிடி

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

வாழ்க்கையில் ஒவ்வொரு செயற்பாடும் ஏதோவொரு வகையில் இன்னொன்றோடு பிணைந்தது தான். குடும்பத்தின் வறுமை, அதைப் போக்க தேடியோடும் குடும்பப் பெரியோர். பிள்ளைகளின் துயரத்தைப் போக்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் பெற்றோர்கள் செய்யும் கருமங்கள் வர்ணிக்க முடியாதவை.

தங்கள் பிள்ளைகளின் எதிர் கால இலட்சியத்தோடு பயணிக்கும் பெற்றோர் அவர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அனுராதபுரத்தின் பெரிமியன்குளம் பளுகஸ்வெவ கிராமத்தில் வசித்துவந்த சிறிய குடும்பம் ஒன்று பெரும் துயரத்தை எதிர் கொண்டு நிற்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மிகமிகச் சிறிய வீட்டில் மூன்று ஆண் குழந்தைகளோடு வாழ்ந்துவரும் அவர்களுக்கு பேரிடியாக மாறியது அன்றைய நாள். திடீர் தீ விபத்தில் அவர்களின் முழு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

எனினும் தீ விபத்து ஏற்பட்ட போது, வீட்டில் எவரும் இருக்கவில்லை. வீட்டில் வசிப்பவர்கள், அயல் வீடொன்றில் நடந்த புண்ணியதானம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள்.

புண்ணியதானம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போதே வீடு தீப்பிடித்து முற்றாக அழிந்து போயுள்ளதை கண்டு பேரதிர்ச்சியடைந்து நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தீ விபத்துக்கு காரணம் மின் ஒழுக்கு அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பத்தில் மூன்று சிறிய ஆண் குழந்தைகள் இருப்பதுடன் மூத்த பிள்ளை இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

பாடசாலை புத்தகங்கள், உடைகள் என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. தினக் கூலிகளாக தினமும் சம்பாதித்து வாழ்க்கையை கொண்டு நடந்தும் பெற்றோர், வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால், பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

Latest Offers