அபாய அணிவது மத சுதந்திரம்

Report Print Steephen Steephen in சமூகம்

ஆசிரியைகள் பாடசாலைக்குள் அபாய அணி தடைவிதிப்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து பாடசாலையில் கடமையாற்றும் மூன்று உதவி ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை விசாரித்ததை அடுத்து ஆணைக்குழு இதனை கூறியுள்ளது.

பாடசாலை அதிபர் மற்றும் அதன் முகாமைத்துவம் அபாய அணிய தடைவிதித்தை எதிர்த்து உதவி ஆசிரியைகள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டு, இந்து கலாசாரத்திற்கு அமைய இந்த பாடசாலை நடத்தப்பட்டு வருவதாகவும் பாடசாலைக்குள் அபாய அணிவது பொருத்தமற்றது என பாடசாலை முகாமைத்துவம் முறைப்பாட்டுக்கு பதிலளித்துள்ளது.

எனினும் பாடசாலை அரசியலமைப்புச் சட்டத்திற்குள் உள்ளடங்குவதால், ஆசிரியைகளின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தின் 10, 12 (01), 12(02) மற்றும் 14 (ஈ) ஆகிய ஷரத்தின் கீழ் மத சுதந்திரம் மீறல் எனவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Latest Offers