கொழும்பு புறக்கோட்டையில் பாரிய தீ! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தீயணைப்புப் படையினர்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

கொழும்ப புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் விரைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு படையின் நான்கு ஐந்து வாகனங்களில் தீயைக் கட்டுப்படுத்த கடும் பிரயத்தனப்பட்டும் தீ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இத்தீவிபத்தில் பெருமளவான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீயினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இதேவேளை இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.