என்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம்: மதுஷ் மேன்முறையீடு

Report Print Steephen Steephen in சமூகம்

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ், தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி, அந்நாட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

துபாய் நாட்டில் பல்வேறு தொழில்களுக்கு நபர்களை ஈடுபடுத்தும் மனித வலு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வர்த்தகர் என்ற ரீதியில் மதுஷ் இந்த மேன்முறையீட்டை செய்துள்ளார்.

அத்துடன் தனது சொத்துக்களில் பெரும் பகுதி துபாயில் இருப்பதாகவும் மதுஷ் மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மாகந்துரே மதுஷ் போதைப் பொருள் கடத்தல்காரர் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் துபாய் நாட்டில் அவருக்கு எதிராக போதைப் பொருள் சம்பந்தமாக எந்த குற்றச்சாட்டும் இதற்கு முன்னர் பதிவாகவில்லை என கூறப்படுகிறது.

தன்னை இலங்கைக்கு நாடு கடத்தினால், துபாயில் உள்ள சகல சொத்துக்களையும் இழக்க நேரிடும் எனவும் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் தொடர்ந்தும் துபாய் நாட்டுக்கு சேவை செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதேபோன்ற பல விடயங்களை மதுஷ் தனது மேன்முறையீட்டில் பல விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers