கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் பதற்றம்! சாதுர்யமாக செயற்பட்ட மீனவர்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை அப்பகுதியில் நடமாடிய ஒருவர், திடீரென கல்லடிப் பாலத்தில் நின்று கடலுக்குள் பாய்ந்துள்ளார். எனினும் அவ்விடத்தில் நின்ற மீனவர்கள் குறித்த நபரைக் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போது அப்வீதியால் சென்றவர்கள் அந்த இடத்தில் கூடியதால் அவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டதுடன், கூட்டமும் அதிகரித்தது,

இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லை.

இதேவேளை, குறித்த பாலத்திலிருந்து அண்மைய நாட்களாக ஒரே பாணியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers