வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

இந்தியாவிலிருந்து இலங்கை வர முயற்சித்த ஒருவர் கேரளாவின் Kempegowda விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டு பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க முயற்சித்த போதே குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான விபுலானந்தம் தாசரா என்ற இலங்கையர் கடந்த 16 வருடங்களாக இந்தியா, வேலூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்.

2002ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா சென்று அங்கு குடியேறியுள்ளார். பின்னர் புகைப்பட பிரிவில் தொழில் வாய்ப்பும் பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டு அங்கு வசித்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் ஒரு கடவுச்சீட்டு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நோக்கில் இலங்கை வர முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பல்வேறு சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers