அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பில் கடந்த 2008-2009 ஆம் ஆண்டுகளில் மாணவர்கள் உட்பட 11 கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்பவர் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருந்தது அன்றைய கடற்படை தளபதி அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவுக்கு தெரியும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.

நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி தலைமறைவாக இருக்க உதவினர் என்ற குற்றச்சாட்டில், தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்ன மற்றும் வர்த்தகரான லக்சிறி அமரசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் வழக்கு தொடர்ந்தது.

2017 ஆம் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலம், சந்தன பிரசாத் கடற்படை தலைமையகத்தில் தலைமறைவாக இருந்துள்ளார் என்பது அவரது மனைவியும் மற்றுமொரு பெண்ணும் வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் இது உறுதியாகியுள்ளதாக நிஷாந்த சில்வா நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தன்னை கைது செய்ய தேடிய போது, தான் கடற்படை தலைமையகத்தில் தலைமறைவாக இருந்ததாக சந்தன பிரசாத் வாக்குமூலம் வழங்கியிருந்ததுடன் லக்சிறி கலகமகே வழங்கிய வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது என நிஷாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் மலேசியாவுக்கு தப்பிச் செல்ல வர்த்தகரான லக்சிறி அமரசிங்க என்பவர் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்த அவரது வங்கிக் கணக்கை ஆராய நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers