திருகோணமலையில் தங்க நகைகளை திருடிய நபருக்கு விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் 19 பவுன் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாலகொடவத்தை- தேவாலகந்த,ஹற்றன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள சில்லறை கடையொன்றில் வேலை பார்த்து வந்த நிலையிலே கடை உரிமையாளரின் வீட்டின் 19 பவுண் தங்க நகைகளை திருடிய வேளையிலே உரிமையாளர் கண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers