காரைதீவில் மதுவரித்திணைக்களத்தின் போதைத்தடுப்பு நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை பிராந்திய மதுவரித் திணைக்களத்தினர் காரைதீவுப் பிரதேச சபையுடன் இணைந்து போதைஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு இலங்கை மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜி.சுமணசிங்கவின் பணிப்பின் பேரில் இன்று மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்முனைப் பிராந்திய மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா, அம்பாறை பிராந்திய பொறுப்பதிகாரி பி.ஸ்ரீகாந்தா, மதுவரிப்பரிசோதகர் பி.செல்வகுமார் சார்ஜன்ட்மேஜர் த.நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

காரைதீவு பிரதேசசபை முன்றலில் இவ்விழிப்புணர் பிரச்சார நடவடிக்கைகள் பதாதைகளை ஏந்தியவாறு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வில் மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் மேலான சிந்தனையில் உதித்த இத்திட்டத்திற்கு எமது ஆணையாளர்நாயம் சுமணசிங்க அணி சேர்க்கும் வண்ணம் இன்று இந்நிகழ்வை காரைதீவில் செய்கிறோம்.

போதைப்பொருள் தொடர்பான ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் தாராளமாக எம்மிடம் முறையிடலாம் 100 வீதம் ரகசியம் பேணப்படும்.அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 063-2222333 மற்றும் 0672220301 ஆகிய இலக்கங்களோடு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எந்த காரணம் கொண்டும் தகவல் தந்தவரின் விபரம் ஒரு போதும் வெளியிடப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.