சிவனொளிபாதமலை பக்தர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ பலாபந்தல விஷ்ராம கட்டிடம் திறந்து வைப்பு

Report Print Mubarak in சமூகம்

இரத்தினபுரி - பலாப்பத்தல பிரதேசத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் சிறு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சிவனொளிபாதமலை பக்தர்களின் பயன்பாட்டுக்கென நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ பலாபந்தல விஷ்ராம இரண்டு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்து மக்களின் பாவணைக்காக கையளித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் பௌத்த தேரர்கள்,மத தலைவர்கள், நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers