மன்னார் கடல் வழியாக தப்பிச் செல்லும் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள்!

Report Print Kamel Kamel in சமூகம்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மன்னார் கடல் வழியாகவே வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் கடல் வழியாக படகு மூலம் அதிகமான பாதாள உலகக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் தப்பிச் செல்வதாக அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு தலைவர் கஞ்சிபானி இம்ரான் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலிஸ் அதிகாரியொருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, மீனவர்களின் உதவியுடன் பெருந்தொகையான போதைப் பொருள் கடல் வழியாக படகுகள் மூலம் வடக்கிற்கு கடத்தப்பட்டு அங்கிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.