தமிழர்களின் நலன்சார் விடயங்களில் பணியாற்ற இணைந்துள்ள அமெரிக்கா

Report Print Theesan in சமூகம்

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள், பாதுகாப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் அரசு துறைக்கான மனித உரிமை அலுவலர் கிறிஷ்ரினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் முதன்மை செயலாளர் சீன்ரூத்தே ஆகியோருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக அரசியல் பரப்பில் போராளிகளது வகிபாகம், சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமகாலத்தில் போராளிகள் மீதான பாதுகாப்பு தரப்பினரது கெடுபிடிகள் மற்றும் அண்மை காலமாக தமிழர் தாயகத்தில் நடைபெற்று வருகின்ற நில மீட்பு போராட்டங்கள், காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் அரசின் காத்திரமற்ற செயற்பாடு தொடர்பிலும், வடகிழக்கில் காணப்படுகின்ற அதீத இராணுவ பிரசன்னம், மக்களின் அன்றாட வாழ்வில் செலுத்துகின்ற தாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகாரப்பகிர்வு என்பது தனியே வடகிழக்கிற்கு மாத்திரமின்றி ஏனைய மாகாணங்களுக்கும் பகிரப்படுவதே இலங்கையில் மிக நீண்ட காலம் புரையோடிப்போன இன்னல்களுக்கு தீர்வாக அமையும்.

எதிர்காலத்தில் ஜனநாயக அரசியல் பரப்பில் போராளிகள் பெறுகின்ற தேர்தல் வெற்றிகளே போராளிகளது நிரந்தர பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா தமிழர்களின் நலன்சார் விடயங்களில் காத்திரமாக இணைந்து பணியாற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers