காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

வடக்கு கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீதமாகவுள்ள சிறிய பிரச்சினைகளை கீழ் மட்டத்தில் முடித்துக்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு கிழக்கில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. சிறியளவிலான பிரச்சினைகளே தற்போது எஞ்சியுள்ளன.

இந்நிலையில், காணி விடுவிப்பு குறித்து தடைகள் எதுவும் இருந்தால் அதனை ஆளுநர், அரசாங்க அதிபர், படை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதனை கையாளமுடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.