மைத்திரியின் மருமகள் யார்? தீவிரமாக தேடும் இலங்கை மக்கள்! வெளியான புதிய தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன திருமணம் செய்யவுள்ள மணமகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தஹாம் சிறிசேன பிரபல வர்த்தகரான அத்துல வீரரத்னவின் மகளான நிபுணி வீரரத்னவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் தஹாம் சிறிசேன திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் மே மாதம் 9ஆத் திகதி பிரமாண்டமாக திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிபுனியை நீண்ட காலமாக தஹாம் சிறிசேன காதலித்து வந்துள்ளார். இலங்கையின் பிரபல வர்த்தகராக நிபுணியின் தந்தை செயற்பட்டு வருகின்றார்.

இரத்தமலானையில் அவரது தந்தைக்கு பல தொழிற்சாலைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மைத்திரி ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே மணமகளின் தந்தையுடன் நெருக்கமான தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது.

உயர் கல்வியின் போதே தஹாம் மற்றும் நிபுணிக்கு இடையில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தஹாம் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற போதும் நிபுணியும் இணைந்திருந்தார்.

சமகால ஜனாதிபதியின் மகனின் திருமணம் தொடர்பான தகவல் வெளியானதும், மணமகள் தொடர்பில் அதிகம் தேடப்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக நிபுணி தனது பேஸ்புக் கணக்கினை செயலிழக்க செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.