சொகுசு காரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசமான காரியம்

Report Print Kumar in சமூகம்
371Shares

சொகுசு காரை பயன்படுத்தி மோசமான காரியத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வைத்து நேற்று மாலை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவையும், குறித்த சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

போதையொழிப்பு வாரத்தினை முன்னிட்டு விசேட நடவடிக்கை மேற்கொண்டு வரும் பொலிஸார் இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குருணாகல் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.