யாழில் திருமணமாகி நான்கே நாட்களில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

Report Print Jeslin Jeslin in சமூகம்
1542Shares

யாழ். நெல்லியடி பகுதியில் திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி நான்கு நாட்களான நிலையில், குறித்த இளைஞர் தனது உடமையில் 1 கிராமும் 100 மில்லி கிராமும் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞனை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.