கிளிநொச்சியில் உறவினரால் தாக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை வைத்தியசாலையில்

Report Print Yathu in சமூகம்
66Shares

கிளிநொச்சி - அக்கராயன் பகுதியில் உறவினர்களால் தாக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அக்கராயன் பிரதேசத்திற்கு உட்பட்ட 50 வீட்டு திட்ட பகுதியில் குழந்தையொன்று தாய், தந்தை இன்றி உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

குறித்த குழந்தை அயலவர்களுடன் அருகில் உள்ள கடைக்கு சென்றதால் குழந்தையின் உறவினர் நேற்று முன் தினம் மாலை கடைமுன்றலில் வைத்து குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபைக்கும் அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் நேற்று குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.