முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நோயாளர்கள் வெளியேற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்
207Shares

முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து இடம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாஞ்சோலை வைத்தியசாலையில் இன்று காலை வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறச்சென்ற நோயாளர்கள் காவுவண்டிகள் மூலம் ஏற்றப்பட்டு உண்ணாபுலவு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சியை தடுப்பதற்கு அங்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகின்ற உயர் வைத்திய அதிகாரியை வெளியேற்றுவதற்காக சிலர் முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து அங்குள்ள வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்சென்ற நோயாளர்கள் முல்லைத்தீவு உண்ணாபுலவு வைத்தியசாலைக்கு இடமாற்றப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.