யாழில் வருடக் கணக்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு! நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

யாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனம் 20 மில்லியன் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்திருந்த நிலையில் இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், வலிகாமம் பகுதி கிணறுகளில் ​எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.