திருகோணமலையில் புத்தக கண்காட்சி

Report Print Mubarak in சமூகம்

சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் மண்டபத்தில் இன்று திருகோணமலை நகரசபையின் தலைவர் நா.இராசநாயகம் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெறுகிறது.

இதன்போது புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 800,000 ரூபா பெறுமதியான நூல்களும், திருகோணமலை மாவட்ட படைப்புகளும், ஈழத்து படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்புத்தக கண்காட்சி எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதில் திருகோணமலை நகரசபை உப தலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராஜா, செயலாளர் தே.ஜெயவிஸ்ட்னு, பிரதம நூலகர் க.வரதகுமார், நூலகர் சி.கேசவச்செல்வி, நூலக உதவியாளர்கள், ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.