கரும்பு பயிர்செய்கை நிலத்தில் பரவிய தீயில் ஒருவர் பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

தமன - ஏராகம பிரதேசத்தில் கரும்பு பயிர்செய்கை நிலத்தில் தீப்பரவியதில் நபர் ஒருவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஏராகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு பயிர்செய்கை நிலத்தை துப்பரவு செய்த குறித்த நபர் அதற்கு தீ வைத்த போது தீ அருகில் இருந்த கரும்பு பயிர்களுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த வேளையிலே அவர் தீ பரவலில் சிக்கி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.