ப்ளையிங் ஸ்கொட்டிடம் வசமாக சிக்கிய மூன்று மருத்துவர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

அரச மருத்துவமனைகளில் கடமையாற்றும் மூன்று மருத்துவர்கள், கடமை நேரத்தில் பிரத்தியேக மருத்துவமனைகளில் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் “ப்ளையிங் ஸ்கொட்” என்ற பிரிவினரே இதனை கண்டுபிடித்துள்ளனர்.

கொஸ்கொட, மாவனல்ல மற்றும் வலப்பனை ஆகிய இடங்களிலேயே இந்த மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் இன்று பொது சேவைகள் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

சுகாதார சேவையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் ப்ளையிங் ஸ்கொட் பிரிவு கடந்த வருடத்தில் சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.